அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு லொறிகள், வேன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்ட்’ என்ற பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த இரண்டு லொறிகள் பயங்கரமாக மோதிக் கொண்டன.

மோதிய வேகத்தில் அவை குழந்தைகள் சென்ற வேனில் மோதின. இதனால் நொறுங்கிய வேன் வீதியில் கவிழ்ந்தது. அதன்மீது மேலும் 2 வாகனங்கள் மோதின. இதனால் வேன் தீப்பிடித்து எரிந்தது.


குறித்த வேனில் பயணித்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்.

அவர்கள் 9 முதல் 14 வயதினர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதற்கிடையே வேன் மீது மோதிய லொறிகளின் சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here