உலகம்

பபுக் சூறாவளி ; 3 பேர் பலி, 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்

தாய்லாந்து நாட்டில் பபுக் சூறாவளியால் 3 பேர் பலியாகிள்ள நிலையில், 34 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


தாய்லாந்து வளைகுடாவில் சூறாவளி உருவாகியுள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், பபுக் சூறாவளியால் தாய்லாந்து நாட்டின் பத்தானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.


இதேபோல், தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பபுக் சூறாவளியால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சூறாவளியால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பத்தானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.
சூறாவளி தாக்கத்தை தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hot Topics

Related Articles