உலகம்

போலி பொலிஸாருக்கு கையூட்டு வழங்கிய இரு இளைஞர்கள் கைது

போலி பொலிஸாருக்கு கையூட்டு வழங்கிய இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் – வவுனியா வீதியின் வீதியோரங்களில் போலி பொலிஸாரின் உருவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த போலி பொலிஸாரின் உருவத்திற்கு அருகில் சென்று கையூட்டு வழங்குவதுபோன்று பாவனை செய்து இரு இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு கையூட்டு வழங்கிய 23 வயதுடைய இரு இளைஞர்களை வவுனிய பொலிஸார் நேற்றையதினம் கைதுசெய்துள்ளனர்.

Hot Topics

Related Articles