அவுஸ்திரேலியாவில் அடுத்த இருபதுக்கு – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த தொடருக்கு 10 அணிகள் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதிபெறும்.
ஆனால் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு 8 அணிகள்தான் தகுதி பெறும். இதற்கான காலக்கெடு முடிவடைந்தது.
இந்நிலையில் நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகள் பெயரை சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், 2 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, 3 ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து, 4 ஆவது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா, 5 ஆவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா, 6 ஆவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, 7 ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள், 8 ஆவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி தகுதிச் சுற்றுக்கான தொடரில் விளையாடி அதன்மூலம் தகுதி பெற வேண்டும்.
தகுதி சுற்றுத் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதியில் இருந்து நவம்பர் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.