உலகம்

ஜனாதிபதியை சந்தித்தார் ஒஸ்லோவின் துணை மேயரான இலங்கை தமிழ் பெண்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயர் கம்ஷாயினி குணரட்ணம் இன்று சந்தித்தார்.


இலங்கையில் பிறந்த கம்ஷாயினி தனது சிறுவயதில் நோர்வே நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்று அங்கு வசித்து வருகின்றார்.

இந்நிலையில் தனது தாய்நாடான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒஸ்லோவின் துணை மேயரான கம்ஷாயினி குணரட்ணம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்கவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் கம்ஷாயினி குணரட்ணம்.


இச் சந்திப்பு இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதுதரகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் இலங்கைக்கான நோர்வே தூதரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles