உலகம்

சீனாவில் பாரிய நிலநடுக்கம் – மக்கள் வீதிகளில் தஞ்சம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். டோங்கே என்கிற கிராமத்தில் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல்கள் இல்லை.

Hot Topics

Related Articles