‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தையடுத்து இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகபோரின் கடைசிக் குண்டு’ என்ற படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் படப்பிடிப்புடன் தொடங்கியது.
பரியேறும் பெருமாள் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பா ரஞ்சித், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை என்பவரை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.
இதில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும், அனேகா மற்றும் ரித்விகா நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் லீஜிஷ், முனிஷ்காந்த், ரமேஷ் திலக் போன்றவர்களும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தென்மா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர் கே செல்வா படத் தொகுப்பை கவனித்துக் கொள்கிறார்.