உலகம்

உதட்டு முத்தத்துடன் ஏமி ஜாக்சான் தனது காதலை வெளிப்படுத்தினார்

கடந்த 2009 இல் நடைபெற்ற இளையோருக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஏமி ஜாக்சன் விஜய் இயக்கிய மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹொலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன், பாலிவுட்டில் சல்மான் கானுடனும், ஹாலிவுட்டில் சில நடிகர்களுடனும் இணைத்து பேசப்பட்டார்.

அண்மையில் ஏமி ஜாக்சன், ஜோர்ஜ் என்ற தொழிலதிபருடன் உதட்டுடன் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகிய நிலையில், தனது ஜோர்ஜ் உடனான காதலை ஏமி உறுதிப்படுத்தியுள்ளார்.

புத்தாண்டு தினம் ஜோர்ஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ஏமி ஜாக்சன், வாழ்க்கையில் புதிய தொடக்கத்தில் கால் பதிக்கிறோம். நான் உங்களை காதலிக்கிறேன். உலகத்திலேயே அதீத மகிழ்ச்சியுடன் நான் இருப்பதற்கு காரணமாக இருப்பதற்காக நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஏமி ஜாக்சன் – ஜோர்ஜ் பனயோட்டு திருமணம் விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Hot Topics

Related Articles