உலகளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கர்ப்பப் பை வாய் புற்றுநோயால் அதிகளவிற்கு பாதிக்கப்படுகிறார்களோ அதேயளவிற்கு ஆண்களில் பெரும்பாலானவர்கள் உணவுக்குழாய் புற்றுநோயிற்கு ஆளாகிறார்கள்.
உலகத்திலேயே அதிக அளவு மரணத்தை ஏற்படுத்துவதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது உணவுக்குழாய் புற்றுநோய் என்பதால், இதற்கான அறிகுறிகள் தோன்றியவுடன், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனைகளை செய்து கொண்டு பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்து கொண்டு சிகிச்சைஎடுத்துக் கொள்ளவேண்டும்.
முதலில் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பசி குறைவாக இருக்கும். புளித்த ஏப்பம் அடிக்கடியோ அல்லது விட்டுவிட்டோ வரக்கூடும். நெஞ்சு அடைப்பது போல் உணர்வு ஏற்படும். அஜீரணம், உடல் எடை திடீரென்று குறைதல் என பல அறிகுறிகள் உண்டு.
ஆனால் இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் இரைப்பையில் புண் ஏற்பட்டாலும் வரும். அதனால் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு எவ்வகையினதான பாதிப்பு என்பதை அறிந்து கொண்டு சிகிச்சைஎடுத்துக் கொள்ளவேண்டும்.
இதனை வந்த பிறகு பரிசோதித்து சத்திர சிகிச்சை, கீமோதெரபி, நவீன கதிரியக்க சிகிச்சை போன்றவற்றை பயன்படுத்தி குணப்படுத்துவதை விட இதனை வராமல் தடுப்பதே சிறந்தது.
அதற்கு முதலில் ஒரே எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கப்பட்ட உணவு பண்டங்களை முற்றாக தவிர்க்கவேண்டும். ஏனெனில் இதன் மூலம் உணவு குழாய் புற்றுநோய் வருகிறது என்று உரிய ஆய்வுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல் அதிகளவிலான உப்பு உதாரணத்திற்கு ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம் போன்றவற்றையும் முற்றாகத்தவிர்க்கவேண்டும். மது மற்றும் புகையிலையையும் முற்றாக தவிர்க்கவேண்டும். இவற்றையெல்லாம் தவிர்த்தால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.