கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk அல்லது www.exams.gov.lk என்ற பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் பார்வையிட முடியும்.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெற்ற குறித்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
இவர்களில் 167,907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றிய 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.