உலகம்

வெளியாகியது அமைச்சுக்களின் பொறுப்புக்களை வரையறுத்து வர்த்தமானி

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்களுக்குமான பொறுப்புக்கள், விடயதானங்கள் மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய விபரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த வர்த்தமானி டிசம்பர் 28 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், தேசிய பாதுகாப்பு நிதியம், இலங்கை பொலிஸ் திணைக்களம், அரச புலனாய்வுத் துறை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் மற்றும் அரசாங்க அச்சகம் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்தவகையில், திறைசேரி, மத்திய வங்கி, அரச வங்கிகள், தேசிய லொத்தர் சபை, இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழான விடயதானங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles