உலகம்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 20 வயது இளைஞன் விமான நிலையத்தில் கைது

ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்களை இலங்கைக்குள் கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் 20 வயதுடையவர் எனவும், அவர் இஹல கொட்ராமுல்ல பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபரிடம் இருந்து 100 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் பெறுமதி சுமார் 1.1 மில்லியன் ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles