தோட்டக்குடியிருப்பில் பரவிய தீ காரணமாக 24 தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – டிக்கோயா – போடைஸ் தோட்டத்திலுள்ள 30 ஏக்கர் தோட்ட குடியிருப்பில் இன்று ( 29.12.2018 ) காலை 6 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பிலுள்ள 24 வீடுகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவலையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் 24 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன் தீயின் காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரைய கண்டறியப்படாத போதிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு படைவீரர்களும் பொலிஸார் மற்றும் பொதுமக்களும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
முற்றாக எரிந்த வீடுகளில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.