உலகம்

இரவுநேரக் களியாட்ட விடுதியில் இடம்பெற்ற பயங்கரம்

இரவு நேரக் களியாட்ட விடுதியில் இளைஞரொருவர் பரிதாபமாக பலியான சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.


கொழும்பு 02 நவம் மாவத்தையில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.


குறித்த களியாட்ட விடுதியில் அமைந்துள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது மின்தூக்கியில் சிக்கி 24 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த மின்தூக்கி 9ஆம் மாடிக்கு பயணித்துக்கொண்டிருந்த முதலாவது மாடியில் உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ் அனர்த்தம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

Related Articles