உலகம்

பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கு முடக்கம்

சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 இலட்சம் இந்திய ரூபாவை சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.

சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நடிகர் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் உள்ள அந்த 2 கணக்குகளிலும் ரூ.73.5 இலட்சம் பணத்தை நடிகர் மகேஷ்பாபு சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் வட்டியை வசூலிக்க ஜி.எஸ்.டி. ஆணையரகம் முடிவுசெய்து உள்ளது.

Hot Topics

Related Articles