கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை முடித்துவிட்டு வடக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.


இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்று பிரதமர் நிலைமையை நேரில் பார்வையிடவுள்ளார்.

இதேவேளை இன்று காலை கண்டிக்கு சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து விசேட ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பிரதமர் அதனையடுத்து தலதா மாளிகையில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதுடன் அங்கு இடம்பெறும் அன்னதான நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here