உலகம்

அஜித்துடன் இணையவுள்ள மற்றுமொரு முன்னணி பிரபல நடிகை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.


விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின்னர் ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னட நடிகையான இவர் அந்த மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கும் பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க அவரிடம் பேசியுள்ளனர்.

இதில் 3 கதாநாயகிகள். ஒரு வேடத்தில் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது.


3 ஆவது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் 3 கதாநாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.வினோத் இயக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Hot Topics

Related Articles