உலகம்

மட்டக்களப்பில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது பொதுமக்களின் காணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 3.5 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.


அதற்கான காணி உறுதிப்பத்திரங்கள் இராணுவத்திரால் உதவி அரசாங்க அதிபரிடம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதியின் வடகிழக்கு மாகாண அபிவிருத்தி செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள அரச, தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி உறுதிமொழிகளின் அடிப்படையில் 8.5 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செலயதக்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தில் 0.5 ஏக்கர் படையினரின் முகாம் இருந்த காணி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை 0.75 ஏக்கர் காணி, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் 2.25 ஏக்கர் காணி, வெலிக்கந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி வலயத்திற்காக 05 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய 03.5 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்ட நிலையில் தமது காணிகள் மகாவலி அபிவிருத்தி வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வாகரை மக்கள் அதிருப்திவெளிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகர ஆணையாளர் தி.சரவணபவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந்தா, கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, 23 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் கபில உதுலகெம, 231 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் மிகுந்து பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles