தெற்கில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பாதாள உலகக்குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை சாதாரண விடயங்களாகக் கருதாமல், துரிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதுடன், நிகழ்ந்து முடிந்த பின்னர் சிந்திக்காமல் எதுவாயினும் சர்வதேச சமூகத்தின் திட்டங்களை முறியடிப்பதற்கான திட்டங்களை முன்னரே வகுப்பது அவசியமாகும்.
நாட்டைப் பிரிப்பதற்கான சர்வதேச சக்திகளின் மற்றுமொரு முயற்சியாகவே மாவனல்லை சம்பவத்தைக் கருத வேண்டியுள்ளது.
பிரபாகரன் மூலமாகவும், புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாகவும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி தோல்வியடைந்தமையின் காரணமாக தற்போது இன, மத ரீதியான வன்முறைகளைத் தூண்டுவதன் மூலம் தமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. எனவே இவை தொடர்பில் விரைவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வடக்கில் ஆவா குழுவினரை புலிகளின் பிரிவொன்றாகவே கருதுகின்றோம். ஆவா குழுவினராலேயே வடக்கில் பொலிஸார் கொல்லப்பட்டனர்.
தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தால் இன்று (27 -12-2018) வியாழக்கிழமை ராஜகிரியவில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.