170 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

170 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கும் வகையில், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association -PA) தனது 170வது ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டத்தை (AGM) எதிர்வவரும் சனிக்கிழமை, 2024 செப்டம்பர் 14 அன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்தவுள்ளது. 


இந்த நிகழ்வில், Hayleys PLC இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹான் பண்டித்தகே, பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.

வருடாந்த பொதுக்கூட்டத்தில் (AGMஇல்), 2024/2025 ஆம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள், அவர்கள் சம்மேளனத்தையும் பெருந்தோட்டத் துறையையும் அடுத்த கட்ட பயணத்திற்கு வழிநடத்துவார்கள், மாறிவரும் சவால்களுக்கு மத்தியில் தொழில்துறையின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும் ஒத்துழைப்பு வழங்கவும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

வருடாந்த பொதுக்கூட்டத்தில் (AGMஇல்) இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கு அசைக்க முடியாத சேவையை வழங்கிய சங்கத்தின் புகழ்மிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். 1854 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), நாட்டின் மிக பழமையான மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இருந்து, பெருந்தோட்ட சமூகத்தின் நலன்களை தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாத்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் வருடாந்த பொதுக்கூட்டத்தில் (AGM), சம்மேளனத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் அதே வேளையில், அடுத்த ஆண்டில் துறையின் எதிர்கால போக்கை வகுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டும் துறையாக, பெருந்தோட்டத் துறை, முக்கியமாக உலகளவில் புகழ்பெற்ற Pure Ceylon Teaக்காக அறியப்படுகிறது, மேலும் இது இரப்பர், தெங்கு, வாசனைப் பொருட்கள் மற்றும் ஃபாம் எண்ணெய் போன்ற பிற முக்கிய பயிர்களையும் உள்ளடக்கியது. இந்த துறை இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏற்றுமதி மூலமாக மட்டுமல்ல, பிராந்திய தோட்ட நிறுவன (RPC) தோட்டங்களில் சுமார் 125,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலமும், தோட்ட சமூகங்களில் வசிக்கும் சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

1992 இல் தனியார்மயமாக்கப்பட்டதிலிருந்து, இலங்கையின் பெருந்தோட்டத் துறை பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது, RPCகள் பயிர் பல்வகைப்படுத்தல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றில் முன்னணி பங்கு வகிக்கின்றன. 

தனியார்மயமாக்கப்பட்ட நிர்வகிப்பு, தொழில்துறையின் செயல்பாட்டு திறனைக் கணிசமாக அதிகரித்துள்ளது, அரசின் நிதி சுமையைக் குறைத்துள்ளதுடன், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.

சங்கம் எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கும்போது, உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மற்றும் புத்தாக்கமான பல்வகைப்படுத்தல் செயற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, அதே வேளையில் இலங்கையின் பெருந்தோட்டத் தயாரிப்புகளை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறை நடைமுறைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்துறையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.