பெலாரூஸில் கிரிக்கெட் போட்டி, வருடாந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்த ISC கல்வி நிறுவனம்
சர்வதேச கல்விக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான International Study Centre (ISC) கல்வி நிறுவனம் மாணவர்கள் மத்தியில் குழுச் செயற்பாடு மற்றும் அவர்களின் உடல் நலனை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய மாணவர்கள், கலாநிதிகள், பீடத்தின் பணியாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பங்குபெற்றும் கிரிக்கெட் போட்டியை 2024 ஆகஸ்ட் 10ஆம் திகதி கிரிமண்டல மைதானத்தில் நடத்தவுள்ளது.
உலகளாவிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்படும் கனடாவில் மிகவும் மதிப்பைப் பெற்ற தகுதியான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவைப் பயிலும் மாணவர்களுக்கு ISC கல்வி நிறுவனம் பட்டமளிப்பு விழாவை நடத்தியிருந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்தக் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பெலாரூஸ் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வையும் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் ஓகஸ்ட் 10ஆம் திகதி கோல்ஃபேஸ் ஹோட்டலில் ISC கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வுகள் ஏற்கனவே பெலாரூஸ் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கூட்டாண்மைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிகளைப் பெற்ற மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களின் பழைய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெலாரூஸ் வாழ்க்கையின் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அறிந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். பல மாத கல்வித் திறமை மற்றும் கடின உழைப்புக்குப் பின்னர் வேடிக்கையான நிகழ்வுகளை எதிர்நோக்குவதால் இந்த நிகழ்வுகள் ISC கல்வி நிறுனத்திலுள்ள மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகின்றது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ISC கல்வி நிறுவனமானது புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. உலகளாவிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்படும் கனடாவில் மிகவும் மதிப்பைப் பெற்ற தகுதியான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவை ISC கல்வி நிறுவனம் கனடா அமைச்சுடன் இணைந்து வழங்குவதால் இதன் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அதிகூடிய அனுமதிகளைப் பெறுகின்றனர்.
இதற்கான நுழைவைப் பெறுவதற் இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட க.பொ.த உயர்தரத்துக்கு சமாந்தரமான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவானது உலகளாவிய ரீதியில் உள்ள 500ற்கும் அதிகமான பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அத்துடன், இதன் விஞ்ஞான வழிகாட்டி இலங்கை மருத்துவ சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், இது க.பொ.த லண்டன் கேம்பிரிஜ் மற்றும் எடெக்ஸல் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுக்குச் சமனானது.
ISC கல்வி நிறுவனம் சர்வதேசக் கல்வியில் கொண்டுள்ள பரந்துபட்ட அனுபவம் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கொண்டுள்ள கூட்டாண்மை காரணமாக இலங்கை மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் பெலாரூஸ் போன்ற நாடுகளில் கற்க வேண்டும் என்ற கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும். கொழும்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள கம்பஸின் ஊடாக மாணவர்களுக்கு பௌதீக ரீதியான வகுப்புக்கள் முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர்களுக்குத் தேவையான கற்றல் சூழலும் இங்கு காணப்படுகின்றது.
அத்துடன், சரியான பல்கலைக்கழகங்கள், சரியான பாடங்களைத் தெரிவுசெய்தல், அனுமதிப் பரீட்சை, வீசா விண்ணப்பம் தயார்ப்படுத்தல், புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு கொழும்பு, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள ISC கல்வி நிலையத்தின் வளாகங்களின் ஊடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களும் ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையான பங்குதாரரான ISC கல்வி நிறுவனத்தைத் தெரிவுசெய்ய வேண்டும்.
எமது சேவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கும், உங்களின் கல்விசார் கனவை நனவாக்க எம்மால் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளவும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.