நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு JAAF வாழ்த்து
இலங்கையின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்துறை அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவை அன்புடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளது.
நாடு தலைமைத்துவத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் போது, இலங்கையின் ஏற்றுமதி- தலைமையிலான வளர்ச்சியின் முக்கிய உந்துதலாகவும், நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையின் முக்கிய அங்கமாகவும் உள்ள துறையின் மகத்தான முக்கியத்துவத்தை JAAF எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை மக்கள் வழங்கிய ஆணையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதாக JAAF உறுதிபூண்டுள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தூரநோக்கு பார்வையானது, ஊழலை ஒழிப்பதற்கும், பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வலுவான கவனம் செலுத்தி, நியாயமான, நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதை மையமாகக் கொண்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி மற்றும் நிலையான பொருளாதார மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு, நெறிமுறை நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் ஆடைத் துறையில் நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களீன் மன்றத்தின் (JAAF) இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.
இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமாக பங்களிக்கும், ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிடத்தக்க ஏற்றுமதி வருவாய் ஈட்டியதோடு, இந்தத் துறை சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களுக்கு தனது ஒத்துழைப்புகளை வழங்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், நாடு முழுவதும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்தத் தொழிற்துறையின் தாக்கம் அதன் நேரடி பொருளாதார பங்களிப்புகளையும் தாண்டி வெகு தொலைவில் நீண்டுள்ளது; இது சமூகங்களை மேம்படுத்துவதிலும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய சக்தியாகவுள்ளது.
புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதித் துறைகளின் தொடர்ச்சியான வெற்றியை உறுதி செய்வதை எதிர்பார்க்கிறோம்," என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) செயலாளர் நாயகம் யொஹான் லோரன்ஸ் கூறினார்.
புதிய ஜனாதிபதியின் தலைமையின் கீழ், ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் சவால்களைத் தாண்டி செழித்து வளரும் என்று JAAF நம்பிக்கை கொண்டுள்ளது.
தொழில்துறைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, மன்றம் புத்தாக்கம், நெறிமுறை நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேராண்மை முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு உறுதியளிக்கிறது. மிகப்பெரிய ஆடை ஏற்றுமதித் துறைகளாக, ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் இலங்கையின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக்கும் நீண்டகால பொருளாதார செழிப்புக்கும் மையமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.