குடியிருப்புசார் வாழ்க்கையின் புதிய தசாப்தம் : John Keells Properties நிறுவனத்தின் VIMAN ஜா – எல வில் அடிக்கல்நாட்டு விழா
மிகவும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள VIMAN ஜா – எல குடியிருப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவை 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதி நடத்தி John Keells Properties நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது.
நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு சான்றாக அமைந்த இந்த நிகழ்வில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதனத் துறையின் தலைவர் நயன மாவில்மட, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆதனத் துறையின் தலைவர் இனோக பெரேரா, பிரதம நிதி அதிகாரி ரவி விஜேவந்த, ஆதன முகாமைத்துவத்தின் தலைவர் ருசிரு அபேசிங்ஹ, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் நதீம் ஷம்ஸ் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட VIMAN ஜா–எல குடியிருப்புத் ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளது. 114 அலகுகளுடன் இதன் முதலாவது கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இதற்கு மேலதிகமாக இரண்டாவது கட்டத்தில் 76 அலகுகள் காணப்படுகின்றன.
இத்திட்டம் பலமான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதால் இரண்டு கட்டங்களிலும் 70% ஆனவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த முக்கிய நிகழ்வில் கருத்துத் தெரிவித்த திரு.நயன மாவில்மட குறிப்பிடுகையில், “இந்த அடிக்கல்நாட்டு விழாவானது புறுநகர் குடியிருப்புச் சந்தையில் John Keells Properties நிறுவனத்தின் முதலாவது முதலீடாக அமைந்திருப்பதுடன், இதனை நோக்கிச் செல்வதையிட்டு நாம் ஆர்வத்துடன் இருக்கின்றோம். சமநிலை, இயற்கை மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் அடிப்படைகளை உள்ளடக்கிய கலவையாக ஒரு தனித்துவமான வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் வகையில் VIMAN அமைக்கப்பட்டுள்ளது.
சரணாலயத்துக்குரிய சூழலைப் போன்ற குடியிருப்பை இயற்கையான சூழலில் வாழக்கூடிய, அணுகல் நிறைந்த, சமூகங்கள் கூட்டாக வாழும் வகையிலான உயர்ந்த வாழ்க்கையை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
திரு.இனோக பெரோ குறிப்பிடுகையில், “முதலாவது கட்டம் மற்றும் இரண்டாவது கட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்புக் காரணமாக 70 அலகுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் VIMAN ஜா–எல திட்டத்திற்குக் காணப்படும் கேள்வி புலனாகின்றது.
இந்த அடிக்கல்நாட்டு விழாவானது மேலும் பல முதலீட்டாளர்களையும், தமது குடும்பத்துக்கு சிறந்த வாழ்க்கைச் சூழலைத் தேடும் நபர்களையும் ஈர்க்கும் என்பது எமது அசையாத நம்பிக்கையாகும். இதன் முதலாவது கட்டம் 2023 செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், ஏறத்தாழ ஆறு மாதங்களில் முழுமையாக விற்பனை செய்யப்பட்டிருப்பதால் தனித்துவமான விலைக்கழிவுகளுக்குக் காணப்படும் உறுதியான கோரிக்கையை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சமூகத்துடன் சேர விரும்புவோருக்கு இரண்டாவது கட்டம் வரையறுக்கப்பட்ட கால வாய்ப்பையே வழங்குகின்றது” என்றார்.
VIMAN ஜா–எல குடியிருப்புத் திட்டமானது ஜா-எல நகரத்தின் இதயப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில் நான்கு கட்டங்களாக 418 தொடர்மாடி வீடுகளை வழங்குகின்றது.
பாதுகாப்பான சிறிய நகரக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு கொழும்பு நகருக்கான அணுகலைக் கொண்ட மூலோபாய அமைவிடத்தில் இத்திட்டம் அமைந்துள்ளது.
சுப்பர்மார்க்கட்டுக்கள், உணவகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக அணுகலுக்கான நெடுஞ்சாலை உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளுக்கான வசதிகளால் குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்.
பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதி நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு தேவைகளுக்கான வெளியக விளையாட்டரங்கம், மின்னியல் வாகனங்களுக்கான மின்னேற்ற வசதி உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல வசதிகளை விமான VIMAN ஜா–எல கொண்டுள்ளது. John Keells Properties நிறுவனம் நவீனத்துவம் மற்றும் நிலைபேறான வாழ்க்கைமுறை ஆகிய இரண்டு விடயங்கள் மீதும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக வலுசக்தி நிறைந்த சூரிய சக்தியால் இயங்கும் வீடுகள் மற்றும் ஏராளமான பசுமையான இடங்கள் மற்றும் வலுவான சமூக உணர்வை வளர்ப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
குடியிருப்புத் திட்டத்தில் வீட்டைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் கொழும்பில் சௌகரியமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டுக்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிட முடியும். VIMAN இல் தமது வீட்டுக கனவை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த அடகுப் பொதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக John Keells Properties நிறுவனம் முன்னனி வங்கிகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.