இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம்

இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம்

இலங்கையின் ஆக்கத்திறன் வரைபடத்தை வெளிப்படுத்தி The Routes we Take:” என்பது பொது மக்களுக்காக 2024 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 1 ஆம் திகதிகளில் கண்காட்சி நிகழ்வினூடாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வு பொது மக்கள் பார்வைக்காக மருதானை, ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் முன்னெடுக்கப்படும். இலங்கையின் EUNIC Cluster மற்றும் Good Life X ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் இலங்கையின் சுழற்சி டிஜிட்டல் தேசப்படத்தையும் ஆக்கத்திறனையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

நாடு முழுவதையும் சேர்ந்த பத்து (10) ஆக்கத்திறனான படைப்புகளை வெளிப்படுத்துவதாக இந்த கண்காட்சி அமைந்திருக்கும், அத்துடன் புத்தாக்கமான பயிற்சிப் பட்டறைகள், நேரலை நிகழ்வுகள் மற்றும் கொழும்பினுள் மக்கள் பார்வையிடக்கூடிய வகையில் திறந்த ஸ்ரூடியோ சுற்றுப் பயணங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

Good Life X, The Routes we Take project செயற்திட்டத்தின் முகாமையாளரான எம்மா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

” The Routes we Take project என்பது இயற்கை சார்ந்த பணி நிலைகளில் ஈடுபடுவோரை இனங்காண்பதிலும், ஒன்றிணைப்பதிலும் சிறந்த பணிகளை மேற்கொள்வதிலும், நிலைபேறான கொள்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. நாடு முழுவதிலும் இந்த ஆக்கத்திறன்களை வலிமைப்படுத்துவதில் இந்த தேசப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதுடன், அவர்களின் பணிகளை கௌரவிக்கும் வகையிலும், இனங்காணப்படும் வகையிலும் அதிகளவு வெளிப்படுத்தலையும், வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

கண்காட்சியினூடாக, சில ஆக்கத்திறனான அம்சங்கள் வெளிப்படுத்தப்படும் என்பதுடன், பொது மக்கள் மத்தியில் இந்தக் கொள்கைகளை ஊக்குவிப்பதுடன், தமது பணிகளினூடாக ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றார்.

‘Routes We Take’ செயற்திட்டம் என்பது, ஆக்கத்திறனாளிகள் மற்றும்  நிறுவனங்களுக்கு நிலைபேறாண்மை, சுழற்சித்தன்மை மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்பி, இலங்கையர்களின் எதிர்காலத்துக்கு ஒன்றிணைந்த பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, மொனராகலை, காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து கண்காட்சியில் இணைந்து கொள்வர்.

பின்வருவோரின் பணிகளை கண்காட்சி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது:

1. தர்மபாலன் திலக்சன்: சுயாதீன கதைகூறல், மனித அனுபவங்களை வெளிப்படுத்தல் மற்றும் பிரதான சமூக பிரச்சனைகளை தீர்த்தல் போன்றவற்றில் விசேடத்துவத்தை கொண்டிருக்கும்.

2. MeshGround: நாட்டிய நிறுவனம் மற்றும் சமூக அக்கறையை தூண்டும் கலை அம்சங்கள் போன்றவற்றை புத்தாக்கமான செயற்பாடுகள், சுயாதீன நகர்வு சிந்தனையாளர்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

3. ALEAF இன் அலேஃபியா நஜ்முதீன்: இலங்கையின் நிலைபேறான வர்த்தக நாமம், இயற்கை மூலப்பொருட்களை கொண்டு சீர்மையான தயாரிப்புகளை வடிவமைப்பதுடன், சிறு கலைஞர்களுடன் கைகோர்த்து அவர்களின் திறன்களை பேணுவதில் கவனம் செலுத்துகின்றது.

 

4. Sriland - Osu Vastra Herbal Clothing: ஆயுர்வேத மூலிகை நிறம் பூசுதலை அறிமுகம் செய்யும் வர்த்தக நாமம், இயற்கை பிரித்தெடுப்புகளினூடாக சூழலுக்கு நட்பான, நச்சுத் தன்மை இல்லாத, கையால் வடிவமைக்கப்பட்ட துணிகளை கொண்டதாக அமைந்திருக்கும்.

5. Amuthu Hathu: உயிரியல் மற்றும் அலங்காரத்தை ஒன்றிணைத்து, மாற்று மூலப் பொருள், உணவு ஆதாரம் மற்றும் மருந்துப் பொருளாக அமைந்துள்ளது.

6. குவேனி டயஸ் மென்டிஸ்: இலங்கையில் பிறந்து, அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள கலைஞர், கலை மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்தி, மீளுருவாக்க செயற்பாடுகள், கலை செயற்பாடுகள் மற்றும் கலாசார வசதியளிப்புகளை வழங்கும்.

7. ருச்சிர விக்ரமசிங்க: நிலைபேறான அலங்கார தெரிவுகளை பயன்படுத்தி ஏற்கனவே காணப்படும் கட்டிடங்களை மீளமைத்தல் மற்றும் மீள பயன்படுத்தலில் கவனம் செலுத்துவார்

8. Lala Studio Pvt Ltd: அகற்றப்பட்ட காற்சட்டை மூலப்பொருட்களை கொண்டு மீளுருவாக்க நவநாகரீக வர்த்தக நாமமாக LGBTQIA+ சமூகத்தினுள் உள்ளடக்கமான நிலையை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

9. KAGUL: இலங்கையின் பாரம்பரிய ஆடை செயன்முறைகளை மீளுருவாக்கும் கட்டமைப்பாக அமைந்திருப்பதுடன், சமய சார் ஆடைகளையும் அதன் கலாசார அம்சங்களினதும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

10. ஸ்ரீதரகுமார் நிலுஷன்: ஆவணப்படுத்தல் மற்றும் சுயாதீன திரைப்பட தயார்ப்படுத்துநராக, சமூகங்கள் மற்றும் புத்தாக்க தீர்வுகளை கொண்டு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பார்.

 

‘The Routes we Take: இலங்கையின் ஆக்கபூர்வ பசுமை தேசப்படம்' என்பது EUNIC Sri Lanka மற்றும் Good Life X இன் செயற்திட்டமாகும். EUNIC – European Union National Institutes for Culture – என்பது தேசிய கலாசார நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் ஐரோப்பிய வலையமைப்பாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் சகல 36 அங்கத்தவர்களையும் கொண்டுள்ளது. EUNIC Sri Lanka - Alliance Française மற்றும் பிரான்ஸ் தூதரகம் மற்றும் மாலைதீவுகள் தூதரகம், கோதே கல்வியகம், பிரிட்டிஷ் கவுன்சில், சுவிஸ் தூதரகம், ஐக்கிய இராஜ்ஜய தூதரகம், நெதர்லாந்து தூதரகம் மற்றும் இத்தாலி தூதரகம் ஆகியன இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், பன்முகத்தன்மையை ஆதரவளித்து, கலாசார உறவுகளை கட்டியெழுப்புவதாக அமைந்துள்ளது.